இனி என் சுயபுராணம்.நில்லுங்கப்பா..ஓடாதீங்க. நான் 2008 ல் ஒன்றும் பெரிதாக சாதிக்கவில்லைதான். பரீட்சைகளில் கூட முதலே சொன்னாற்போல் அதே கிரேடுகளைத் (Grade) தான் வாங்கினேன். என்ன கிரேடு என்று நீங்கள் கேட்பது விளங்குது. நான் ஒரு Great என்று சொல்லும்படியான கிரேடுகள் தான். 2008 ல் நான் செய்த உருப்படியான காரியங்கள் (படிப்பைத் தவிர்த்து), பேஸ்புக்கில் இணைந்தது, வலைப்பூ தொடங்கியது, என் நட்பு வட்டாரத்தை பெருக்கியது.
.
During DIP Presentaion Setup
.
படிப்பில் பண்ணிய உருப்படிகள், பல்கலைக் கழகத்தில் 6 வார கால Design & Innovation Project ல் எங்கள் 20 பேர் அணி பண்ணிய “Vacant Seat Detection" project இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றது. மொத்த 100 க்கு மேற்பட்ட project களில் இருந்து எம்மையும் சேர்த்து 6 projects இறுதிப் போட்டிக்கு சென்றது. ஆறுதல் பரிசுதான் கிடைத்தாலும் உருப்படியான project என்ற பாராட்டும் கிடைத்தது. இந்த project நமது அணியினரால் முன்மொழியப்பட்டு செய்யப்பட்டது. மதிய வேளைகளில், நமது பல்கலைக் கழக உணவகங்களில் உட்காருவதற்கு இடம் கிடைக்காமல் படும் கஸ்டத்தை தீர்க்கவே இந்த திட்டம் முன் மொழியப்பட்டது. Sensors, micro processors, Radio Frequency Communication என்பவற்றை இணைத்து LCD display ல் இருக்கைகளின் நிலவரத்தை (Seats Availability) ஐ காட்டுவது தான் இந்த Project. ஒவ்வொரு இருக்கைக்கும் ஒரு sensor, ஒரு மேசைக்கு (4-8 இருக்கைகள்) ஒரு communication + microprocessor என்பது தான் திட்டம். நானும் என் நண்பர்களும் Sensor Design பண்ணினோம். மற்றவர்கள் microprocessor programming உம் wireless communication ஐயும் பண்ணினார்கள். தனித்தனியாக செய்தபோது உருவாகாத பிரச்சினைகள் (technical faults), எல்லாவற்றையும் ஒருங்கிணைத்த போது உருவானது. அதனையும் வெற்றிகரமாக தீர்த்தோம்.
.
.
பொதுவாகவே எனக்கு இந்த friendster, hi5, orkurt போன்ற social networking sites ல் சேர அழைப்பு வந்தா நிராகரித்துவிடுவேன். அவ்வளவாக ஆர்வம் இல்லை. 2003 ல் இருந்து எனக்கு என் நண்பர்களிடம் இருந்து அடிக்கடி இப்படி அழைப்புகள் வரும். நானும் நிராகரித்துவிடுவேன். 2007 ல் இருந்து பேஸ்புக் (Facebook) ல் இருந்து அழைப்புகள் வந்தது. நிராகரித்தேன். ஒபாமா அலை அதிகமாக எழுந்த போது ஒபாமா தன் ஆதரவு வீச்சை அதிகரிக்க பேஸ்புக்கையும் ஒரு சாதனமாக பாவித்ததாக அறிந்த போது, நானும் அந்த ஜோதியில் என்னை இணைத்துக் கொண்டேன். யாரோ ஒரு பெண்ணுக்காக நான் பேஸ்புக்கில் இணைந்ததாக நண்பர்கள் கிசு கிசு பரப்பி சந்தோசப்பட்டுக்கொண்டார்கள்.
.
.
பேஸ்புக் மற்ற தளங்களில் இருந்து வேறுபடுவதற்கு காரணம் அதன் செயலிகள்(Applications) தான். பேஸ்புக்கின் சொந்த செயலிகள் பல இருந்தாலும் 3ம் தரப்பு (3rd party) செயலிகள் அதிகம். T20 Cricket, Play Fish games, Army, Airforce..இப்படி எண்ணற்ற செயலிகள் உண்டு. அதைவிட பேஸ்புக் மொழிமாற்ற செயலியும் உண்டு. தமிழில் பேஸ்புக்கை கொண்டு வரும் முயற்சியில் நண்பர் தர்சனுடன் நானும் இணைந்தேன். எம் முயற்சியால் சிலரை இதில் இணைத்துக் கொண்டு முதல் கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்டினோம். இப்போது மொழிமாற்றப் பணியில் 190க்கு மேல் இணைந்தாலும் உருப்படியாக செய்வது 10 பேர் தான். 2ம் கட்டத்தில் 40 % ல் நிற்கிறோம். இந்திய மொழிகளில் கட்டம் 1 ஐ முதலில் கடந்தது தமிழும், பெங்காலியும் தான்.
.
பேஸ்புக் மூலம் என் பள்ளிக்கால நண்பர்கள் பலரை மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஜப்பான் முதல் அமெரிக்கா வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில்.என்னை பலரும் நினைவு வைத்திருப்பது மகிழ்ச்சி. ஆனால் நான் பலரை மறந்து போனேன். சிலர் பெயர் ஞாபகம் இருந்தது, முகம் ஞாபகம் இல்லை. அழைப்பு வரும் போது, யாரவது பொதுவான நண்பர்களாக இருக்கிறார்களா என்று பார்ப்பேன்..அவர்களிடம் விசாரித்து மேலதிக விபரம் அறிந்து கொள்வேன்.
.
வலைப்பதிவுகளிடம் நான் அறிமுகமானது 2004ல். அப்போது என் நண்பர் ஈழநாதன் வலைப்பூக்களில் மினக்கெட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வலைப்பூக்களில் அதிக நேரம் செலவளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியவர்களில் நான் முதன்மையானவன். தமிழில் தட்டச்சு செய்வதெல்லாம் எனக்கு அப்போது வேப்பங்காய். ஈழநாதன் காலப்போக்கில் வலைப்பதிவுகளில் இருந்து முற்றாக ஓய்வு பெற்று விட்டார். 2005 களில் என் நண்பி ஒருவர் தான் வலைப்பூ (ஆங்கிலத்தில்) வைத்திருப்பதாக காட்ட நானும் ஒரு வலைப்பூவை அவசரமாக தொடங்கி பின் அதனை மறந்து போனேன். பின் Windows live Space ல் ஏதோ என் படஙகளை எல்லாம் போட்டு கொஞ்சம் எழுதிவைத்தேன். என் இன்னொரு நண்பர் ஒருவர் அவ்வப்போது அனுப்பும் வலைப்பூக்களை வாசிப்பேன்.அவர் அனுப்பியவை, கானா பிரபாவின் மடத்து வாசல், தூயாவின் சமையல் கட்டு. சும்மா பார்த்துவிட்டு போவேன்.எழுத வேணும் என்று தோன்றவில்லை.
.
வலைப்பதிவுகளிடம் நான் மீண்டும் அறிமுகமானது 2008ல். எதேச்சையாக தமிழ்மணத்தின் பக்கத்துக்கு வந்தால் அங்கே வலைப்பதிவுகள் பல. அப்போது விடுமுறை காலம் என்பதால் ஓய்வு நேரங்களில் வாசிக்கத் தொடங்கினேன். அதிகம் வாசித்தவை, லக்கிலுக், பரிசல்காரன், கோவி கண்ணன், கானா பிரபா, மற்றும் பல...இதற்கிடையில் பேஸ்புக்கில் நமது பல்கலைக்கழக நண்பர்களை இணைப்பதற்காக என்னால் திறக்கப்பட்ட ஒரு குழுவில் நான் எழுதிய ஒரு நக்கல் பதிவு (அதன் பிரதி) பெரும் வரவேற்பை பெற நான் வலைப்பதிவு தொடங்கலாம் என்று விபரீத முடிவு எடுத்தேன்.
.
.
சாதாரணமாகத் தான் தொடங்கினேன். சிலர் வரவேற்றார்கள். நண்பர்கள் பலர் நக்கலடித்தார்கள். நான் சிங்கையிலிருப்பவர் என்று தெரிந்தோ என்னவோ, ஜெகதீசன், முகவை மைந்தன் போன்றவர்களிடம் இருந்து வரவேற்புகள் வந்தன. சிங்கை(செந்தில்) நாதன் ஈமெயில் அனுப்பினார். பதிவர் சந்திப்புக்கு வருமாறு அழைப்புகள் வந்தன. யூன் சந்திப்புக்கு,ஆகஸ்ட் சந்திப்புக்கும் என்னால் போகமுடியவில்லை. செப்டெம்பர் சந்திப்புக்கு போனேன். வரவேற்பு பலமாக இருந்தது. நவம்பர் சந்திப்புக்கு பரீட்சையை காரணம்காட்டி போகவில்லை. டிசம்பரில் சில பதிவர்களுடன் சிற்றுலா சென்று வந்தோம்.
.
.
மலேசியா இரு முறை சென்று வந்தேன். நண்பர்களுக்காக சென்ற படியால் புதிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. KL, Batucaves, Genting என்று ஏற்கனவே சென்ற இடங்களுக்கு தான் சென்றேன். பத்துகேவ் முருகன் ஏன் சிங்கிளா இருக்கார் என்ற என் கேள்விக்கு அந்த முருகனாலேயே பதில் சொல்ல முடியவில்லை. போதாக்குறைக்கு என் நண்பர் ஒருவர் விட்ட பகிடியால் முருகன் எம்முடன் கடுங்கோபத்தில் இருப்பதாக அறிய முடிகின்றது.
.
.
உருப்படியான படங்களை தியேட்டரில் பார்த்தேன்.பீமா, தவிர்த்து தசாவதாரம், சரோஜா, வாரணம் ஆயிரம், பொம்மலாட்டம் போன்ற நல்ல படங்கள். டீவிடீயில் பார்த்தவை; அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், குருவி. நான் பல்கலைக் கழகத்தில் எடுத்த ஒரு தெரிவுப் பாடம் “ஹாலிவூட் முதல் பாலிவூட் வரை”. இதனால் 12 நல்ல படங்களை பார்க்க முடிந்தது. Monsoon Wedding, Earth, Taxi Driver, Chunking Express, Pulp Fiction, Bicyle Theives, போன்ற படங்கள் என்னைக் கவர்ந்தன. இவை பற்றிய விமர்சனங்களை ஏலுமென்றால் அடுத்த வருடம் எழுதுகிறேன். இந்தப் பாடத்தால் சினிமா பற்றிய தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் பலவற்றை புதிதாக கற்றுக் கொண்டேன். தற்போது படங்கள் பார்க்கும் போது அவற்றையும் கவனிக்க முற்படுகிறேன்.
.
அடுத்த வருடத்தில் (வாற திங்கட்கிழமை முதல்) Internship தொடங்குகின்றது. ASM Technologies என்ற நிறுவனத்தில் தான் எனக்கு Internship. Software programming, GUI Design, Technical Manual Preparation என்றெல்லாம் பெரிதாக கூறப்பட்டிருந்தாலும் உண்மையா எனக்கு என்ன வேலை தரப்போகின்றார்களோ தெரியாது. ஜூன் முதல் வாரம் வரை வேலை. அதன் பிறகு 2 மாதம் விடுமுறை. எங்காவது ஒரு நீண்ட திக்விஜயம் போக வேண்டும். அதன் பிறகு ஆகஸ்டில் இறுதியாண்டு ஆரம்பம். 2010 ல் படித்து முடியும் போது வேலை கிடைக்குமா தெரியாது. இல்லையென்றால் மேற்படிப்புக்கு செல்லவேண்டியது தான்.
.
source
.
இதுவரை எனக்கு ஊக்கமும் ஆதரவும் தந்த அனைவருக்கு நன்றிகள்.
அனைவருக்கும் என் இனிய ஆங்கில, (தமிழ்) புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
.
(பி.கு.: சிங்கையில் ஜனவரி 15 விடுமுறை நாள் அல்லாத படியால் நாளைகே நான் தமிழ்புத்தாண்டையும்(பொங்கல்) கொண்டாடப் போகிறேன். செலவு மிச்சம்.)
15 மறுமொழி(கள்):
\\இனி என் சுயபுராணம்.நில்லுங்கப்பா..ஓடாதீங்க.\\
நல்ல வேலை ஓடியிருப்பேன் ...
\\யாரோ ஒரு பெண்ணுக்காக நான் பேஸ்புக்கில் இணைந்ததாக நண்பர்கள் கிசு கிசு பரப்பி சந்தோசப்பட்டுக்கொண்டார்கள்.\\
அப்பிடியா ...
:-)
ஓடுவதென்றால் வெயில் தாழ்ந்த பின் ஓடுங்கள். உடலுக்கு நல்லது.
\\ ASM Technologies என்ற நிறுவனத்தில் தான் எனக்கு Internship. Software programming, GUI Design, Technical Manual Preparation \\
வாழ்த்துக்கள் சகோ ...
கற்றுக்கொண்டதை முடிந்தவரையில் எங்களுக்கும் சொல்லி தாருங்கள்
ஆகா...பார்க்கலாம். :)
சுயபுராணம் நல்லாவே இருக்கு...:)
நன்றி நிஜமாகவே நல்லவரே..
//அடுத்த வருடத்தில் (வாற திங்கட்கிழமை முதல்) Internship தொடங்குகின்றது. //
நல்லா செய்யுங்கோ... வாழ்த்துக்கள்...
//உண்மையா எனக்கு என்ன வேலை தரப்போகின்றார்களோ தெரியாது.//
என்ன தந்தாலும் நாங்க புளொக் வாசிக்கிறத விடமாட்டம்... :)
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
நன்றி நிமல்..உங்களுக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துகள்
சுய புராணம் நன்றாகவே இருந்தது..
அன்புடன் அருணா
நன்றி அருணா...:-)
வாழ்த்துக்கள் டொன் லீ. நீங்கள் கூறிய பல தகவல்கள் ஆச்சர்யமாக இருந்தது (ஒபாமா உட்பட)
ஆ..அப்படியென்ன ஆச்சரியங்கள்..:-)
நன்றி கிரி
சுயபுராணம் நல்லாவே இருக்கு...:)
இது ஒரு அவையடக்கத்துடன் எழுதப்பட்டது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்:-)
Post a Comment