சூர்யா வாரணம் ஆயிரத்தில் கிட்டார் மீட்டினதுதான் மீட்டினார், இப்ப நம்ம பொடியன்கள் எல்லாரும் கிட்டார் மோகத்தில் கிட்டார் வாங்க அலைகிறாங்கள். என் வீட்டிலும் ஒருவர் கிட்டார் வாங்கி மீட்டிக் கொண்டிருக்கிறார்.பொதுவாகவே மேல்தட்டு கிறிஸ்தவர்கள் வீட்டில் சிலுவை இருக்கோ இல்லையோ, கட்டாயம் கிட்டார் இருக்கும். சரி இந்தக் கிட்டார் வேற எத்தனை தமிழ் சினிமா கதாநாயகர்களை ஆக்கிரமித்துள்ளது என ஒரு சின்ன வெட்டி ஆய்வு மேற்கொண்டதில் கண்டறிந்த உண்மைகள்...
பிரதாப் போத்தன்
பாடல்: “என் இனிய பொன்னிலாவே”, படம்: மூடுபனி, இசை: இளையராஜா, பாடியவர்: ஜேசுதாஸ், இயக்கம்: பாலுமகேந்திரா
மோகன்
படம்: “பயணங்கள் முடிவதில்லை”, பாடல்: “இளைய நிலா பொழிகின்றது”, இசை: இளையராஜா, பாடியவர்: SP பாலசுப்பிரமணியம்
அரவிந்த் சாமி
பாடல்: “நலம் வாழ” படம்: மறுபடியும், இசை: இளையராஜா, பாடியவர்: SP பாலசுப்பிரமணியம், இயக்கம்: பாலுமகேந்திரா
சூர்யா
பாடல்:”நெஞ்சுக்குள் பெய்திடும்” படம்: வாரணம் ஆயிரம், இசை: ஹாரிஸ் ஜெயராஜ், பாடியவர்: ஹரிஹரன், பாடல்: தாமரை, இயக்கம்: கெளதம்
இதைவிட நினைத்தாலே இனிக்கும் “எங்கேயும் எப்போதும்” பாடலில் ரஜினி கிட்டார் மீட்டியிருப்பார். ஆனால் அதில் கமல் மைக் பிடித்தது தான் பிரபலமானது போல் தெரிகின்றது. அந்த மைக் மோகன் வரும் வரை கமலிடம் இன்னும் சில வருடங்கள் இருந்தது.
இதை விட யாராவது இருக்காங்களா என்று தெரியவில்லை. இருந்தால் பதிலளியுங்கள்..




4 மறுமொழி(கள்):
//இப்ப நம்ம பொடியன்கள் எல்லாரும் கிட்டார் மோகத்தில் கிட்டார் வாங்க அலைகிறாங்கள்//
ஹிஹி.. நிஜமாவே எனக்கு கிட்டார் இசை மீது ரொம்ப பிரியம் :))
ஆனா வாசிக்க எல்லாம் தெரியாது.. :))
"இளையநிலா பொழிகிறது" இந்த பாட விட்டு விட்டீங்களே.
//ஹிஹி.. நிஜமாவே எனக்கு கிட்டார் இசை மீது ரொம்ப பிரியம் :))
ஆனா வாசிக்க எல்லாம் தெரியாது.. :)//
அப்படி உணமையை ஒத்துக் கொள்ளுங்கள்
//"இளையநிலா பொழிகிறது" இந்த பாட விட்டு விட்டீங்களே.//
நன்றி வெங்கி..அதானே மோகன் இல்லாமல் ஒரு இசை பற்றிய பதிவா என்று எனக்கே ஒரு நெருடலாக இருந்தது...போட்டாகிவிட்டது
Post a Comment