சங்கி & மங்கி

1995 ஒரு ரியூசன் வகுப்பு,

.

சங்கி எனப்படும் சங்கரனும் மங்கி எனப்படும் மகேந்திரனும் இணைபிரியா தோழர்கள்.

.

”டேய் சங்கி..என்னடா ஒரே கவலையா இருக்கிறாய்..?”

.

“ஓமடா மங்கி. இப்ப நான் ரீயூசனுக்கு வரேக்க நந்தினி எனக்கு முன்னால தான் நடந்து வந்து கொண்டிருந்தவா..சரி என்று நானும் சைக்கிளை வைச்சு ஏதேதோ படம் எல்லாம் காட்டினான்..ஆனால் அவள் என்னை கண்டுக்காமல் உந்த ஒழுங்கைக்குள்ளால ஓடி ஒழிஞ்சுட்டா..”

.

“சரி விடுடா..அவளை ரியூசன் முடிஞ்சதும் தூக்கிட வேண்டியது தான்.”

.

இரு விடலைகளும் சிரித்துக் கொண்டனர்.

.

.......................................................................................

.

2009 பாலர் பாடசாலை (nursery)

.

சங்கி ஜூனியரும் மங்கி ஜூனியரும் தமது சீனியர்கள் வழி இணைபிரியா தோழர்கள். ஒரே வகுப்பு.

.

“டேய் ஏன் ஒரே கவலையாய் இருக்கிறாய்..?”

.

“நேத்தைக்கு புத்தகம் வாங்க எங்கட பிளாக்குக்கு கீழ இருந்த கடைக்கு போனனான். அங்க ஒரு சின்னப் பொண்ணுடா, எங்களை விடக்குறைவு தான்..அவ அம்மா தோளில தொங்கிக்கொண்டு விரல் சூப்பிக் கொண்டிருந்தா. நானும் பலூன் விட்டு, விரல் வித்தை காட்டி என்னமெ எல்லாம் ட்ரை பண்ணினனான். அவ அழத்தொடங்கிட்டாடா..எனக்கு பெரிய இன்சல்டா போயிடுதடா..

.

“கவலைப்படாதேடா..தொட்டிலோட தூக்கிடலாமடா...”

.

பின்னால இரண்டு கைகள் தென்படுவதைப் இருவரும் உணர முன், இருவர் தலைகளும் குட்டப்பட்டன.

.

சில மணித்தியாலங்கள் கழித்து

.

ஆசிரியரைச் சந்திக்க தம்பதிகள் சமேதராக வந்திருந்த சங்கியும் மங்கியும், மூக்குடைபட்டு வெளியேற, தலையில் குட்டு வாங்கிய ஜூனியர்கள் சிரித்துக் கொண்டு வெளியேறினர்.

.

காரணம் “நந்தினி” டீச்சர்.

.

(இன்று வந்த ஒரு குறுஞ்செய்தியின் பாதிப்பில் உருவான ஒரு சிந்தனை)

21 மறுமொழி(கள்):



நட்புடன் ஜமால் said...

நன்றாக இருந்தது தங்கள் கற்பனை.

அ.மு.செய்யது said...

நல்லா இருந்துச்சுங்க !!

உங்களின் சிங்கை பதிவர்கள் சந்திப்பு பற்றிய வர்ணனை அருமை !!

குறிப்பாக ஸ்ரீலஸ்ரீ யூசுப் பால்ராஜ் அய்யங்கார் சுவாமிகள் ப‌ற்றி நீங்க‌ள் குறிப்பிடும்
இட‌ங்களை வெகுவாக‌ ர‌சித்தேன்.அந்த‌ அருள் பாலித்த‌ விஷ‌ய‌ங்க‌ள் பற்றிய வார்த்தைகள்
படித்த பின்னரும் மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

’டொன்’ லீ said...

நன்றி ஜமால், அ.மு. செய்யது

ச்சின்னப் பையன் said...

ஹாஹா... பகடி அருமை...

A N A N T H E N said...

யாழ் தமிழ் மணக்க எழுதி இருகிங்க...

சுருக்கமா இருக்கு...

அப்போ காலேஜ் படிக்கிறப்போ நந்தினி டீச்சர சங்கியும் மங்கியும் "தூக்கலையா"?

கிரி said...

ஹி ஹி ஹி

பின் குறிப்பு : உங்களோட ஒரு சில வார்த்தைகள் அர்த்தம் சரியாக புரியவில்லை..நான் சங்கி மங்கி ஆகிட்டேன் :-)

LOSHAN said...

டொன் வயசு வந்தாச்சு எண்டு பதிவு சொல்லுது.. ;)
அது சரி சங்கரன் சங்கி என்றால் டொன்.. ????? ஹீ ஹீ

TamilBloggersUnit said...

நன்றாக இருந்தது

’டொன்’ லீ said...

//ஹாஹா... பகடி அருமை. //

நன்றி..பகடி அல்ல ,,,பகிடி,,, :)

’டொன்’ லீ said...

//யாழ் தமிழ் மணக்க எழுதி இருகிங்க...//

துழைஞ்சது (தொலைஞ்சது) போக மிச்சம் இருக்குறது..இவ்வளவுதான்

//சுருக்கமா இருக்கு...

அப்போ காலேஜ் படிக்கிறப்போ நந்தினி டீச்சர சங்கியும் மங்கியும் "தூக்கலையா"?//

அவங்களாவது தூக்கிறதாவது...:-)

’டொன்’ லீ said...

//ஹி ஹி ஹி

பின் குறிப்பு : உங்களோட ஒரு சில வார்த்தைகள் அர்த்தம் சரியாக புரியவில்லை..நான் சங்கி மங்கி ஆகிட்டேன் :-)

//

அப்படியா...ம் அடுத்த முறை விளக்கமும் கீழே கொடுத்துவிடுகிறேன்..:-)

’டொன்’ லீ said...

//டொன் வயசு வந்தாச்சு எண்டு பதிவு சொல்லுது.. ;)//

அதெல்லாம் எப்பவோ முடிஞ்சாச்சு..

//அது சரி சங்கரன் சங்கி என்றால் டொன்.. ????? ஹீ ஹீ//

இது கொலைவெறி...நான் அவன் இல்லை...:-)

’டொன்’ லீ said...

//நன்றாக இருந்தது//

நன்றி TamilBloggersUnit

ஜோதிபாரதி said...

டொன் லீ, பகடியில் கலக்குகிறீர்கள்!
விவேக்கின் அல்கேட்ஸ்(அழகேசன்) தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு.

’டொன்’ லீ said...

நன்றி ஜோதி பாரதி அண்ணா..:-)

நிஜமா நல்லவன் said...

ஹா...ஹா...சூப்பர்!

அன்புடன் அருணா said...

இன்னும் நல்லா எழுதுவீங்களே ’டொன்’ லீ ...
அன்புடன் அருணா

’டொன்’ லீ said...

நன்றி நிஜமா நல்லவரே..:-)

’டொன்’ லீ said...

இன்னும் நல்லா எழுதுவீங்களே ’டொன்’ லீ ...

முயற்சிக்கிறேன் அருணா..

நன்றி

υnĸnown вlogger™ said...

:D
நல்லா இருந்தது

’டொன்’ லீ said...

நன்றி Unknown Blogger :-)