.
.
அட எனக்கும் 2 பேர் பட்டாம் பூச்சி விருது கொடுத்துவிட்டார்கள். அந்த 2 நல்ல உள்ளங்கள் (உண்மையில் எனக்கெல்லாம் கொடுக்கிறதென்றால் அவங்க ரொம்ப நல்லவங்கப்பா). அதிரை “நட்புடன் ஜமால்” & “அன்புடன் அருணா”. ஜமாலின் பதிவில் இது பற்றி முதலில் வந்த போது எனக்கு என்ன இதென்று விளங்கவில்லை. வேலை முடிந்து வந்த அவசரத்தில் பார்த்துவிட்டு பதில் போட்டு விட்டு இருந்துவிட்டேன். பின் அருணாவும் எனக்கு விருதை அளித்தபோது தான்..எனக்கு இது ஒரு தொடர் விளையாட்டு என்றும், இதை நான் 3 பேருக்கு அளிக்க வேண்டும் என்ற விதிகளும் விளங்கியது. பலரும் பலவிதமாக இந்த பட்டாம்பூச்சியை அளிக்கின்றனர். தங்களுக்கு பிடித்த பதிவர்கள், புதியவர்கள், நண்பர்கள், ஊக்குவித்தவர்கள் என்று பல விதங்களில் அளிக்கின்றனர். நானும் என் பங்கிற்கு 3 பேருக்கு இந்த விருதை அளிக்கின்றேன்.
.
அனந்தன் :
பினாங்கைச் சேர்ந்த மலேசிய பதிவரான இவர் தொடர்கதைகளை எழுதுவதில் வல்லவர். நகைச்சுவையும் நளினமும் கூடி வருவதை இவர் எழுத்துக்களில் காணலாம்.
.
மலேசியாவின் பிரபல பதிவர். பத்திரிகைகளில் எழுதுபவர். குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமில்லாமல் சகல விடயங்களைப் பற்றியும் அழகாக அலசுவார்.
.
சமூக கருத்துக்கள், அரசியல் என்று சரவெடி வீசினாலும் இவரின் பலம்..இவரது கவிதைகள்.
.
இவர்களும் தொடர் விதிமுறைப்படி
- பட்டாம் பூச்சியை தங்கள் வலைப்பதிவில் இணைக்கவேண்டும்.
- தங்களுக்கு விருது தந்த அந்த நல்லவர்(களி)ன் முகவரியை இணைக்க வேண்டும்.
- 3 பதிவர்களை முன்மொழியவேண்டும்
- அவர்களுக்கு உங்கள் பதிவில் இணைப்பு கொடுக்கப்படவேண்டும்.
- அவர்களில் பதிவுகளில் இந்தச் செய்தியை தெரிவிக்க வேண்டும்.
.
பட்டாம் பூச்சி தொடர்ந்து சிறகடித்து பறக்கட்டும்.
.
18 மறுமொழி(கள்):
நெல்லைத்தமிழின் சோதனை தமிழ் திரட்டியில் இணைக்க
http://india.nellaitamil.com/
பட்டாம்பூச்சி கொடுத்தாச்சா???
very good Don Lee!!
anbudan aruNaa
ஆமாம்...நன்றி ’அன்புடன் அருணா’..
/சமூக கருத்துக்கள், அரசியல் என்று சரவெடி வீசினாலும் இவரின் பலம்..இவரது கவிதைகள். . /
மறுக்கா...உரக்க....கூவிக்கிறேன்...:)
உங்களுக்கு ரெண்டு பேர் கொடுத்துட்டாங்களா....வாழ்த்துக்கள்..!
நிஜமா நல்லவன் கூறியது...
உங்களுக்கு ரெண்டு பேர் கொடுத்துட்டாங்களா....வாழ்த்துக்கள்..!
நன்றி..
டொன் லீ.,
ரெண்டு பேருட்ட வாங்குனதால.,
நீங்க ஆறு பேருக்கு இதை பகிர்ந்தளிக்க வேணும் ஆமா...
உத்தரவு..
முரு
\\ நிஜமா நல்லவன் கூறியது...
/சமூக கருத்துக்கள், அரசியல் என்று சரவெடி வீசினாலும் இவரின் பலம்..இவரது கவிதைகள். . /
மறுக்கா...உரக்க....கூவிக்கிறேன்...:)\\
நானும் நானும் ...
வாழ்த்துக்கள் தங்களுக்கும்
தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.
muru கூறியது...
டொன் லீ.,
ரெண்டு பேருட்ட வாங்குனதால.,
நீங்க ஆறு பேருக்கு இதை பகிர்ந்தளிக்க வேணும் ஆமா...
உத்தரவு..
ஆவ்...இதென்ன புதுக்கதையா இருக்கு...
நட்புடன் ஜமால் கூறியது...
வாழ்த்துக்கள் தங்களுக்கும்
தங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.
நன்றி ஜமால்
கிராமத்து பனம்பழத்திலும்
வண்ணத்துப் பூச்சியை
வகை வகையாய்
ரசிச்சவனுக்கு
பட்டாம் பூச்சி எனும்
பகட்டான விருதா?
நன்றி!
'டொன் லீ @ பட்டாம்பூச்சி தந்ததா சொன்னிங்க. நீங்கள் தரும் ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி தல ...
அதை என்னோட பக்கத்துல எப்படி ஏற்றம் செய்வது? எனக்கு HTML script பழக்கம் இல்லை, உதவ முடியுமா?
அனந்தன்...templete க்கு போய் add gadgets ல் சென்று...அழுத்தினால் ஒரு புதிய window திறக்கும். அதில் Photo க்கான gadget ஐ தேர்ந்தெடுக்கவும்
:-)
இணைச்சாச்சு!
நன்றி அனந்தன்
வாழ்த்துக்கள்..!
நன்றி பிரபு :-)
Post a Comment